Olaichuvadi's blog

Malaysia: Internal Security Act used to punish human rights activists

4 September 2008

New information about the arbitrary detention of five Malaysian government critics obtained by Amnesty International researchers highlights the need for the Malaysian parliament to immediately abolish the country's Internal Security Act, Amnesty International said today.
A recent Amnesty International mission to Malaysia researching the human rights situation there established that the sole reason for the detention of five members of Hindu Rights Action Force (HINDRAF), a group dedicated to defending the rights of Malaysia's ethnic South Asians, was for expressing concerns about the marginalization of ethnic South Asians within Malaysian society and specifically for organizing rallies.

உன் திசையில் உலகத் திசை

உன்
கண்களில் உண்டு
எரிமலை

உன்
கைகளில் உண்டு
வல்லமை

அகிலத்தை
அசைக்கும் சக்தி
உன்
வார்த்தைகள்

உன் பின்
இளைஞர் படை திரட்சி
உன்னிலே
வெளிப்படும் பெரும் புரட்சி

சிறை என்ன சிறை
இன்று அது உன்
சின்ன அறை..
மக்கள் சக்தி - உன்
மிகப்பெரிய அறை...
இதய அறை!

கைதானவர்கள் விடுதலை!

கடந்த 23-ஆம் திகதி, பண்டார் பெர்டா செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற மறியலில் கைதான ஒன்பது இந்துராப்பு ஆதரவாளர்களில் இரு பெண்மணிகள், நேற்று மதியம் 2 மணியளவிலும் மற்ற எழுவர் இன்று மாலை 6 மணியளவிலும் விடுவிக்கப்பட்டனர்.

சாந்தி 30, சாரதா 34 ஆகிய இருவரையும் பேராக் மாநில இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி பிணை கையெழுத்திட்டப் பின் விடுவித்தனர்.

இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரனையும் மற்ற அறுவரையும் மத்திய செபராங் பிறை மாவட்ட காவல் நிலையத்திலிருந்து வட செபராங் பிறை மாவட்ட காவல் நிலையத்திற்கு இன்று காலையில் கொண்டு சென்றனர். அதன்பின் மாலை 6 மணியளவில் எழுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்துராப்பு கட்டமைப்பில் புல்லுருவிகள்!

HINDRAF
135-3 JALAN TOMAN 7
KEMAYAN SQUARE
70200 SEREMBAN

விரிவான ஊடக அறிக்கை 23 ஆகசுட்டு 2008

கரு : உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதான திரு.வசந்தகுமார் காவல்த் துறையின் சிறப்புப் படை பிரிவினரால், இந்துராப்பின் செயல்பாடுகளைக் கண்டறிய நியமிக்கப்பட்டவர். திரு.இராமசந்திரன் மெய்யப்பன் (ராமாஜி) மற்றும் திரு.ரெகு இந்துராப்பின் கட்டமைப்பை உடைத்தெறிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கைக்கூலிகள்.

Hindraf makkal sakti - merdeka 24 hour national maha yaagam and hunger strike

Date : 30th August 2008 – 31st august 2008

Time : 8.00 am (Sat 30th Aug - Sun 31st aug)

Venue: devi sree maha mariamman aalayam
Jalan besar mantin negeri sembilan.

Maha Yaagam would commence 24hours non stop with chanting of hymns to seek divine blessings for the release of HINDRAF Lawyers detained under ISA, supporters maliciously prosecuted by the Attorney General and Grant of Political Rights of the marginalised oppressed suppressed and permanently colonized Indian community.

வாக்கு நமது போதிமரம்

சகோதரர்களே ...

நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...

நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...

நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்

இரத்த தானம் புரிந்த அனைவருக்கும் நன்றி - ஈப்போ இண்ட்ராப்

ஈப்போ இண்ட்ராப் ஏற்பாட்டில் கடந்த ஆகசுட்டு 10-ஆம் திகதி காலை 8.30 மணி தொடங்கி மதியம் 1.30 மணிவரை, புந்தோங்கில் நடைப்பெற்ற ரத்த தான நிகழ்வு இனிதே நடந்தேறியது. பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு ரத்த தானம் செய்தனர். நிகழ்வில் கலந்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும், ரத்த தானம் புரிந்த அனைவருக்கும் ஈப்போ இண்ட்ராப்பினர் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.

நிகழ்வின் நிழற்படங்கள் - நன்றி திரு.சத்தி (ஈப்போ)..

இண்ட்ராப் ஆதரவாளர்களின் உண்ணா நோன்புப் போராட்டம்..

கடந்த 10-ஆம் திகதி ஆகசுட்டு மாதம், 30 பேர்கள் அடங்கிய இண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று, கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் வளாகத்தில் உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இதேப் போன்ற போராட்டம் நாடு தழுவிய நிலையில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து இண்ட்ராப் தலைவர்களையும், பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள திரு.வேதமூர்த்தியையும் விடுவிக்கக் கோரும் போராட்டமே இது என திரு.ஜெயதாஸ் கூறினார். மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள திரு.உதயகுமாருக்கு உரிய சிகிச்சையை வெளிநாட்டில் அளிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தைக் கோருவதாயும், உள்நாட்டு மருத்துவமனைகளின் மீது தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் கூறினார். இவ்வுண்ணா நோன்புப் போராட்டம் இனி நாடு தழுவிய நிலையில் காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணிவரைத் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

Hindraf started Hunger Strike..

விடுதலையே உதயம் ...

விடியல்
ஒளிக்கற்றைகள்
உன் விழிகளில்
இளைஞர்
படையணியினர்
உன் வழிகளில் ...

வளர்ந்த
உன் தாடிக்குள்
ஞானம் தேடும்
ஆட்சியாளர்கள்
கிழிந்த
உன் கால்சிலுவாரில்
பாடம் படிக்கும்
காவலர்கள் ...

உன்
உதயம்
கொடுமதியாளர்
கண்களைக்
கூசச் செய்துள்ளது ...

உன் மூர்த்தி
அவர்களது கீர்த்திக்கு
அபாய சங்கு
ஒலித்துள்ளது ...

நான்கு இண்ட்ராப் ஆதரவாளர்கள் கைது!!


இன்று மதியம் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தின் வெளியே அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த நான்கு இண்ட்ராப் ஆதரவாளர்கள் காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான நால்வரில் ஒரு பெண்மணியும் அடங்குவார் என டாங் வாங்கி ஓ.சி.பி.டி துணைத் தலைமைக் காவல்த்துறை அதிகாரி சூல்கார்னாயின் அப்துல் ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Four Hindraf activists held at Commonwealth meeting


Four Hindu Rights Action Force (Hindraf) activists were arrested near the Kuala Lumpur Convention Centre (KLCC) today for failing to disperse on police orders.

MCPX
Dang Wangi OCPD ACP Zulkarnain Abdul Rahman told reporters that the four, including a woman, were arrested at the roadside while "picketing."

ஈப்போ இண்ட்ராப் ஏற்பாட்டில் புந்தோங்கில் இரத்ததான நிகழ்வு


"இரத்த தானம் செய்யுங்கள், உயிரைக் காப்பாற்றுங்கள்"

உங்களுக்குத் தெரியுமா..? ஒவ்வொரு 2.5 வினாடிகளுக்கொருமுறை யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. அவர்கள் நம் நண்பர்களாக இருக்கலாம், குடும்பத்தினராக இருக்கலாம், ஏன் அவர் நீங்களாகக் கூட இருக்கலாம்..

ஓருயிரைக் காப்பதற்கு இதுவே பொன்னானத் தருணம்!

எனவே, இரத்த தானம் செய்யுங்கள்..

மூன்று மாதங்களாக மின்சாரமின்றி தவிக்கும் காப்பார் தமிழ்ப் பள்ளி..!


HINDU RIGHTS ACTION FORCE
No. 135-3-A, Jalan Toman 7,
Kemayan Square,
70200 Seremban, Negeri Sembilan
Malaysia. Tel : +606-7672995/6
Fax: +6-06-7672997 Email waytha@hotmail.com

Y.A.B. DATO’ SERI ABDULLAH AHMAD BADAWI
Minister of Finance
Block Utama,
Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya Tel: 03 8888 8000

அமைதியான தீபாவளி - இண்ட்ராப்பு கோரிக்கை..

இண்ட்ராப்பு குரல்

இந்து ஆலயங்கள் மீண்டும் உடைபடும் அபாயம்..!!

இலண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தி,

(இந்து) ஆலயங்கள் இனி உடைபடாது. (NST 11/07/08 Pg 13)

மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி, இனி இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவது நிறுத்தப்படும் என முதன்முறையாகவும் வெளிப்படையாகவும் மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏன் கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு மட்டும் உத்திரவாதம் கொடுக்கப்படுகிறது? மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் நிலை என்ன?

திரு.உதயகுமாருக்கு மறுவாழ்வுப் பயிற்சியா...?


இது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். திரு.உதயகுமாருக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க வேண்டுமா? அல்லது மூலைக்கெட்ட இனவாத அரசியலை மேற்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க வேண்டுமா?

மலேசிய இந்தியர்கள் இண்ட்ராப் தலைவர்களோடு சேர்ந்து உரிமைக்காகப் போராடிய போராட்டத்தை, வெறும் கேலிக்கூத்து என்றெண்ணிவிட்டார்களா அவர்கள்(அம்னோ)?

பேராக் இண்ட்ராப் ஏற்பாட்டில் மகிழுந்து ஊர்வலம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-07-2008) பேராக் மாநில அளவில் 'இ.சா வை துடைத்தொழிப்போம்' எனும் கருப்பொருளில் மகிழுந்து ஊர்வல நிகழ்வு ஒன்று பேராக் இண்ட்ராப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஈப்போ கல்லுமலை அருள்மிகு சிறீ சுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து இந்த ஊர்வலம் தொடங்கி ஈப்போ மாநகரை ஆதரவாளர்கள் வலம் வந்தனர்.

ஈப்போவிலிருந்து திரு.சத்தி கிருஷ்ணன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.. (நன்றி)

60 இந்தியர்களுக்கு உராட்சிமன்ற உறுப்பினர் பதவி - பேராக் இண்ட்ராப் கோரிக்கை.

10-ஆம் திகதி சூலையன்று காலை 10 மணியளவில் பேராக் மாநில இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி தலைமையேற்ற 15 பேர்கள் அடங்கிய குழு ஒன்று, பேராக் மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் இந்தியர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய பிரத்தியேகமாக மந்திரி புசாரால் நியமிக்கப்பட்ட அதிகாரி எம்.நடராசாவைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.

Syndicate content